சும்மா இருந்த யானையை வணக்கம் வைத்து சீண்டிய நபர்.! தட்டி தூக்கிய போலீஸ்

சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த யானையை குடிபோதையில் வந்த நபர் வணக்கம் வைத்து சீண்டிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Police arrested a person who disturbed an elephant in Dharmapuri forest area

யானை-மனிதர்கள் மோதல்

யானை சென்ற வழித்தடத்தில் ஏராளமான மரங்கள் முளைக்க தொடங்கிவிடும். அந்த அளவுக்கு காடுகள் உருவாக்கத்தில் யானைகளின் பங்கு இருக்கிறது. வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள், ரிசார்டுகள் கட்டியதன் காரணமாக வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக யானையின் வழித்தடத்தை மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக மின்வேலி போட்டு மூடியதால் யானைகள் எங்கே செல்வது என்று தெரியாமல் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் மனிதர்களை தாக்கும் நிலை கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகிறது.

<p> 

யானையை சீண்டிய நபர் கைது

இந்த நிலையில் தர்மபுரி வனப்பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த யானையை அப்பகுதியாக சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி யானையை சீண்டியுள்ளார். யானையை தாம் கட்டுப்படுத்துவதாகவும், யானையை தெய்வமாக வணங்குவதாக கூறி யானையை கையெடுத்து கும்பிட்டு சீண்டினார். யானையோ அந்த நபரை  தாக்குவதற்காக முயன்றது. இருந்தபோதும் யானை நல்ல மனநிலையில் இருந்தததால் அவரை தாக்காமல் அமைதியாக இருந்து விட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

<

p> 

 

சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பார்த்த பலரும் தமிழக வனத்துறை மற்றும் மத்திய அரசின் வனத்துறைக்கு டேக் செய்து இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், வனப்பகுதியில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த யானையை சீண்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். உடனடி நடவடிக்கை எடுத்த தர்மபுரி வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை நிச்சயம்..! அடித்து சொல்லும் ஆர்.எஸ் பாரதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios