நீட் தேர்வுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 000 பேரை போலீசார் கைது செய்தனர்.

மருத்து படிப்பிற்கான சீட்டுகளை நீட் என்ற தேர்வு மூலம் மூலம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தமிழக எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் தேர்வை நடத்தி  முடித்தது.

இதையடுத்து வந்த தேர்வு முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள், மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.