தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது.

நாட்டில் 1,900க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவற்றில் 400க்கு மேற்பட்ட கட்சிகள் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. என தலைமை தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே அந்தக் கட்சிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார். தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மேலும், அந்தக் கட்சிகளுக்கு வரிவிலக்கு அளிக்கக் கூடாது என்றும் வருமான வரித் துறையிடம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு, அரசியல் கட்சிகளையோ அல்லது தொண்டு அமைப்புகளையோ பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று நாடாளுமன்றத்தின் வெளியே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.