Anbumani Ramadoss: வெற்றியை இழந்திருக்கலாம்; களம் நமக்கு சாதகமாகவே உள்ளது - தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்

கடந்த 57 ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் சீரழித்துள்ள நிலையில், அனைத்து சீரழிவுகளையும் சரிசெய்யும் அருமருந்து பாமக.விடம் தான் உள்ளது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸக் தெரிவித்துள்ளார்.

pmk president anbumani ramadoss wrote lette to party cadres vel

பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி சாத்தியமாகவில்லை. வெற்றியை சுவைக்க முடியாதது எப்போதுமே வருத்தமளிக்கும் ஒன்று தான் என்றாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவும் இல்லை. இந்த தேர்தல் போரில் நாம் வெற்றியை இழந்திருக்கலாம். ஆனால், களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் நமக்கு சதகமாகவே உள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் சளைக்காமல் களப்பணியாற்றிய உங்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு இது இப்படி இருந்திருந்தால், அது அப்படி நடந்திருக்கும் என்பன போன்ற யூகங்கள் தேவையில்லை. காரணம், இந்த தேர்தலுக்கு முன்பாகவே நமது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல, 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்பதை தெளிவுபடுத்தி இருந்தோம். பாமக அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் நமது இலக்கு.

மக்களுக்கு அரசியல் புரிதல் இல்லை; தோல்வி குறித்து நடிகர் தங்கர் பச்சான் காட்டம்

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு விஸயத்தை தெளிவாக காட்டுகின்றன. ஆளும் திமுக அதன் அதிகார வலிமை, பண வலிமை, படை வலிமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினாலும் கூட, அதன் வாக்கு 2019 தேர்தலலை விட மூன்றில் 1 பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும் கூட அந்த கட்சியால் 2019ல் பெற்ற வாக்குகளை விட 13 விழுக்காடு குறைவாகவே பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று தமிழ் நாடு மக்கள் விரும்புவதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதை அனைவரும் உணர வேண்டும்.

தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழ் நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை தான் என்றாலும் கூட, அதன் வளர்ச்சிக்காக 57 ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒரே ஒரு பாசனத் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.

மதுவை விட பெரும் ஆபத்தாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உருவெடுத்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதிகளில் கூட கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் 4ட கஞ்சா போதையில் ஆசிரியர்களை தாக்கும் அவலம் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் ஆகியவை அதிகரிக்கவும் கஞ்சா போதையே காரணம்.

Ramadoss: ஜூலை 1 முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமல்? அரசுக்கு இராமதாஸ் கோரிக்கை

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளால் தமிழ்நாடு எதிர்கொண்ட அனைத்து சீரழிவுகளையும் சரி செய்வதற்கான அருமருந்து பாமக தான். தமிழ்நாடு அரசியலில் பாமக பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் அதே போல் மீண்டு வருவோம். அதில் உங்களுக்கு எந்த ஐயமும், கவலையும் தேவையில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் நமக்கு சாதகமாக இருக்கிறது. மக்கள் நம்மை வரவேற்கு தயாராக இருக்கிறார்கள் நானும் முதல் ஆளாக இருந்து உங்களை வழிநடத்துவதற்கு காத்திருக்கிறேன். 2026 தேர்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி வீறு நடைபோடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios