2 லட்சம் அரசு பணியிடங்கள் எங்கே ? தமிழக இளைஞர்கள் கதி என்ன ? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி !

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்வதில் முறைகேடுகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.

Pmk president anbumani ramadoss ask question tn govt about govt jobs vacancy

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தமிழக அரசுத் துறைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணி இடங்களையும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைக்க அரசு ஆணையிட்டிருக்கிறது. 

Pmk president anbumani ramadoss ask question tn govt about govt jobs vacancy

மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?

தமிழகத்தில் அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், இது பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும். காலியிடங்களை நிரப்பாமல் வைத்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காலியிடங்களை ரத்து செய்ய துடிப்பது அப்பட்டமான ஆட் குறைப்பு நடவடிக்கை தான். இதன் முடிவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும். 

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். இது மிகப்பெரிய சமூக அநீதி. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், இன்று வரை அரசுத்துறைகளில் ஒரு பணியிடம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Pmk president anbumani ramadoss ask question tn govt about govt jobs vacancy

அதேபோல், கடந்த 15 மாதங்களில் நிரப்பப்பட்ட அரசுப் பணி காலி இடங்களைவிட, புதிதாக உருவாக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இத்தகைய சூழலில் காலியாக உள்ள 3½ லட்சம் பணியிடங்களை ஒழிக்க நினைப்பது நியாயமல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3½ லட்சம் பணி இடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios