Asianet News TamilAsianet News Tamil

ஜன.12 அன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு!!

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். 

pm modi visits tamilnadu on jan 12
Author
Tamilnadu, First Published Dec 18, 2021, 3:35 PM IST

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க கடந்தாண்டு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது, இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி திறந்து வைக்க தமிழகம்  வருகிறார். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 150 இடங்கள் என 1650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

pm modi visits tamilnadu on jan 12

இந்தியாவில் உள்ள 593 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 69 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும், மொத்தமுள்ள 45,698 மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரத்து 375 மருத்துவ இடங்கள் இருப்பதாக  தேசிய மருத்துவக் குழு தெரிவித்தது. அதேபோன்று, மாநிலத்தில் மொத்தமுள்ள 312 அரசுக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 37 அரசுக் கல்லூரிகள் இருப்பதாகவும். பொத்தமுள்ள 22 ஆயிரத்து 933  மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 5 ஆயிரத்து 125 மருத்துவ இடங்கள்  இருப்பதாகவும் தெரிவித்தது. இதில்,15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு முறையில் மத்திய அரசுக்கு வழங்கப்படும். மீதமுள்ள, 85% இடங்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்டையில் மாநில அரசு மாணவர் சேர்க்கையை நடத்தும். நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல்மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முன்னதாக அனுமதி அளித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

pm modi visits tamilnadu on jan 12

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, இந்த திட்டங்களில் ரூ.17 ஆயிரத்து 691.08 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவடையும்போது, இளநிலை மருத்துவப்படிப்பில் 16,000 இடங்கள் சேர்க்கப்படும். 64 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், 6,500 இடங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள மாநில அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ரூ.2,451 கோடி வழங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios