Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: திருப்பூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரை!

பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோவை வருகிறார். மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடியும், அண்ணாமலையும் ஊர்வலமாகச் செல்கிறார்கள்.

PM Modi visit Tamil Nadu today: Speech at a huge public meeting in Tirupur sgb
Author
First Published Feb 27, 2024, 9:19 AM IST | Last Updated Feb 27, 2024, 9:30 AM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் நிறைவு விழா திருப்பூரில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

பிரதமர் வருகைக்கு மத்தியில் இன்று காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நிறைவு விழா நடக்கும் மைதானம் வரை அண்ணாமாலை தனது நடைபயணத்தைத் தொடங்குகிறார். நிறைவு விழாவுக்காக பல்லடம் மாதப்பூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மூலம் 2.35 மணிக்கு பல்லடம் செல்கிறார். பின் மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடியும், அண்ணாமலையும் ஊர்வலமாகச் செல்கிறார்கள்.

ஒன்றுக்கொன்று சவால் விடும் சூப்பர் பவர்... செம ஸ்பீடு... ரூ.2.5 லட்சத்திற்குள் கிடைக்கும் பெஸ்டு பைக் எது?

மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மதுரையில் தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் இரவு மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

PM Modi visit Tamil Nadu today: Speech at a huge public meeting in Tirupur sgb

அதன்பிறகு மறுநாள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடியில் நடக்கும் புதிய திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் நெல்லையில் காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் உள்ள மைதானம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானவர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்களே... ரேஷன் கார்டை ரெடியா எடுத்து வச்சுக்கோங்க... விரைவில் வீடுக்கே வரப்போறாங்களாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios