பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தபோது, பிரபல இசையமைப்பாளர் சித்திரவீணை என். ரவிகிரணை சந்தித்து பேசினார். 

பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தபோது, பிரபல இசையமைப்பாளர் சித்திரவீணை என். ரவிகிரணை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்தபோது, பிரபல இசையமைப்பாளர் சித்திரவீணை என். ரவிகிரணை சந்தித்து பேசினார். அவர்களுக்கிடையே கலாசாரம், கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான பிரதமரின் பார்வையை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ரவிகிரண், 2 வயதிலியே உலகின் மிக இளமையான திறமைசாலி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் மறைவு - தலைவர்கள் இரங்கல்

1992 முதல் பின்தங்கியவர்களுக்கான இசை முயற்சிகளின் முன்னோடியாக உள்ளார். சர்வ ஷிக்ஷா அபியானின் உத்தரவின் பேரில் 2006 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய இசை முகாமை அவர் இயக்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 31,000 தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். ரவிகிரண், பல பள்ளி இசைக்குழுக்கள் உட்பட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சிம்பொனிகளுக்கு 100க்கும் மேற்பட்ட இந்திய ராகங்களை அறிமுகப்படுத்திய தனிச்சிறப்பு பெற்றவர்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்கவேண்டும் - அண்ணாமலை கோரிக்

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ரவிகிரண் கூறுகையில், இது மிகவும் அர்த்தமுள்ள கருத்துப் பரிமாற்றம். மேலும் எனது முன்மொழிவு - புதிய கல்விக் கொள்கையில் இணைக்கப்படும்போது அது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான கலைத்திறன் மற்றும் ஆர்வமுள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான கதவுகளைத் திறக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.