முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் மறைவு - தலைவர்கள் இரங்கல்
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் இன்று காலமானார்.
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் இன்று காலமானார். முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐஏஎஸ், காலமானதை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இரங்கல் தெரிவித்துள்ளார். ''நரேஷ் குப்தா ஒரு நல்ல அதிகாரியாக திகழ்ந்தார். அவர் என்னையும் நம்மில் பெரும்பாலோரையும் கவர்ந்தவர். அவரது எளிமை மற்றும் பணிவு மூலம், சிறந்த நபரை இழந்துள்ளோம். அவர் மிகவும் எளிமையான மற்றும் நேர்மையான அதிகாரி. தலைமைச் செயலக ஊழியர்களை திகைக்க வைக்கும் வகையில் ஆட்டோவில் பயணித்து செல்வார். மென்மையாகப் பேசினாலும், வாக்குப்பதிவு நடத்துவதில் அவர் ஒரு கடினமான மாஸ்டராக வலம் வந்தவர் என்று சத்யப்பிரியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?