திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பிளஸ் டூ படித்து வரும் மாணவியை காதலிப்பதாக கூறி, பழகி வந்த பழனிச்சாமி என்கிற இளைஞர், மாணவியை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் தற்போது அந்த மாணவி கர்பமாகினார். மாணவி கர்பமாக இருப்பது தெரிய வந்ததும் அவசர அவசரமாக வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார் பழனிச்சாமி. 

இந்த தகவலை குறித்து அறிந்ததும் அதிர்ச்சியான மாணவி, உடனடியாக இந்த சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார். மேலும் தற்போது தான் கர்ப்பமகா இருப்பதால், தன்னை ஏமாற்றி விட்டு, மம்மனியூர் கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை அவசர, அவசரமாக பழனிச்சாமி திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலையும் கூறனார்.

இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இப்புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததோடு, பழனிச்சாமியை கைது செய்தனர்.