Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி..! தேர்வு பயத்தினால் பிளஸ் 2 மாணவன் தீக்குளித்து தற்கொலை.. மகன் பிரிந்த சோகத்தினால் தந்தை கவலைகிடம்.

மதுரை மாவட்டத்தில்  பொதுத்தேர்வு பயம் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Plus 2 student commits suicide in fear of exam
Author
Tamil Nadu, First Published May 6, 2022, 11:23 AM IST

மதுரை மாவட்டத்தில்  பொதுத்தேர்வு பயம் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் பழனிபாபு. ஒவருக்கும் 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் சஞ்சய் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று பிள்ஸ் 2 மாணவர்களுக்கு பொத்தேர்வு தொடங்கியது. மே 28 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. இதனிடயே பொதுத்தேர்வு படித்து வந்த சஞ்சய் நேற்று தனது தாய்மாமன் வீட்டில் திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய்மாமன் ராஜபாண்டி, அவரை காப்பாற்ற முயற்சித்து பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், காயமடைந்த இருவரையும் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

மேலும் படிக்க: திமுகவுக்கு எதிராக ஆதீனங்கள்..முட்டுக்கட்டை போடும் தருமபுரம் ஆதீனம்.! அப்செட்டில் இந்து அமைப்புகள்.!

பன்னிரண்டாம்‌ வகுப்பு படித்து வரும்‌ மகன்‌ சஞ்சய்‌ பொதுத்‌ தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில்‌, தேர்வு பயம்‌ காரணமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மாணவன் சஞ்சய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்‌. காப்பாற்ற முயன்ற ராஜபாண்டி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்‌. இவர்‌ காவல்துறையில்‌ சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்‌ மகன் தற்கொலை செய்து இறந்த செய்தியறிந்த தந்தை பழனிபாபு, துக்கத்தில் தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள்‌ அவரை உடனடியாக மீட்டு திருமங்கலம்‌ அரசு மருத்துவமனையில்  அனுமதித்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மகன்‌ இறந்த சோகம்‌ தாளாமல்‌ தந்தையும்‌ தற்கொலைக்கு முயன்ற சம்பவம்‌ அப்பகுதியில் பெரும்‌ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசும் கல்வித்துறை அதிகாரிகள், தேர்வு என்பது வாழ்க்கை அல்ல.இந்த முறை தேர்ச்சி பெற இயலாவிட்டால்‌ அடுத்தடுத்து வாய்ப்புகள் இருக்கிறது. தேர்வு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களும்‌ ஆசிரியர்களும்‌ மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்‌ என்று கூறுகின்றனர். மேலும்‌ மாணவர்களுக்கு தேர்வு குறித்த ஊக்கத்தையும்‌ உற்சாகத்தையும்‌ வழங்க வேண்டுமே தவிர அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டாம்‌ என்று கேட்டுக்‌ கொண்டனர்‌.

மேலும் படிக்க: இது தான் உங்க வேலையா..? ஒழுங்கா இல்ல டிரான்ஸ்பர் தான்.. அதிகாரிகளை அலற விட்ட அமைச்சர்..

Follow Us:
Download App:
  • android
  • ios