பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கிறோம் என்கிற பெயரில் சிறு சிறு வியாபாரிகளை துன்புறுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவியா பிளாஸ்டிக் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த மனு இன்று நீதிபதிகளான சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர்விட்ட நீதிபதிகள், ’பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கிறோம் என்கிற பெயரில் சிறு சிறு வியாபாரிகளை துன்புறுத்தக் கூடாது.  தடைபெய்யப்பட்ட 14 பொருட்களைத்தவிர மற்ற பொருட்களை தடை செய்யக்கூடாது.

புரிதலின்றி தடை செய்யப்படாத பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்த அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.  பிளாஸ்டிக் தடை உத்தரவை ரத்து செய்ய முடியாது’’ என அவர்கள் உத்தரவிட்டனர்.