பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலை - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலை விற்பனை தொடர்பான உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

Plaster of Paris Ganesha idol sale petition challenged in supreme court against madras hc smp

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதனிடையே, கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதால் அவற்றை கரைக்கும் போது, நீர் நிலைகள் மாசடையும் என்பதால் விநாயகர் சிலைகளை விற்க அனுமதி போலீசார் மறுக்கின்றனர். நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. எனவே, விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.” என கோரியிருந்தார்.

சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு: பிரதமர் மோடி!

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. ஆனால், சிலை விற்பனையை தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும் என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இவ்வகை சிலைகள் தயாரிக்கவும், விற்கவும் கூடாது என தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதனையேற்றுக் கொண்டு வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios