கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்யாத பயணிகளின் நெரிசலைக் குறைக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்காக சூப்பர் திட்டம் : சொந்த ஊரில் நல்ல சம்பளம் இல்லை, படித்த படிப்பிற்கு வேலை இல்லையென லட்சக்கணக்கான மக்கள் பல ஊர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அப்படி செல்லும் போது தனியார் பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் பயணிகள் அரசு பேருந்தை நம்பி வருகிறார்கள். அப்படி கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துகிடக்கிறது. அங்கு போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தால் பயணிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கிளாம்பாக்கத்தில் பேருந்து தட்டுப்பாடு- பயணிகள் அவதி
இதனை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் படி பேருந்தில் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தி வருகிறது. இருந்த போதும் அவரச பயணமாக செல்பவர்கள் பேருந்தில் முன்பதிவு செய்யலாம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு உரிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகிறது. அப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துறை, கடந்த 4-ம் தேதி. வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்துகளும், 5-ம் தேதி 622 பேருந்துகளும், 6-ம் தேதி 798 பேருந்துகளும் இயக்கப்பட்டன, இந்த 3 நாட்களில் முன்பதிவு செய்திருந்த 24,831 பேர் உட்பட 2,76,735 பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கத்தில் முன்கூட்டியே கூடுதல் பேருந்துகளை நிறுத்தி வைக்க திட்டம்
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திடீரென வரும் பயணிகள் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் வருவதை சமாளிக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகளை முன்கூட்டியை கிளாம்பாக்கத்தில் நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனியார் இயக்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தில் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
