MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பஸ் டிக்கெட் ஈஸியாக கிடைக்க சூப்பர் வழி.! போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

பஸ் டிக்கெட் ஈஸியாக கிடைக்க சூப்பர் வழி.! போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாவதாக வெளியான செய்திகளுக்குப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 08 2025, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
Image Credit : our own

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கடந்த மூன்று நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி நிலையில் இதுகுறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு முன்பதிவு அடிப்படையில் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
போக்குவரத்து கழகம் விளக்கம்
Image Credit : our own

போக்குவரத்து கழகம் விளக்கம்

இந்நிலையில் 04.06.2025 (புதன்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு 73,480 பயணிகளும், 05.06.2025 (வியாழக்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 622 பேருந்துகள் இயக்கப்பட்டு 96,690 பயணிகளும் மற்றும் 06.06.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 798 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,06,205 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

34
அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி
Image Credit : our own

அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி

இந்நிலையில், புதன்கிழமை அன்று 7,031 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 8,496 பயணிகளும் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று 9,364 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆக மொத்தம் மூன்று தினங்களில் 24,831 முன்பதிவு செய்த பயணிகள் உட்பட 2,76,735 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னையிலிருந்து 94,926 முன்பதிவு இருக்கைகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வசதி அளித்துள்ள நிலையில் 26% இருக்கைகள் மட்டுமே கடந்த மூன்று தினங்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து இருக்கையில் அதிகபட்சமாக 9% மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.

பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்கையில் பேருந்து நிலையங்களில் தேவையற்ற விவாதங்கள், முந்தியடித்து ஏறுதல் மற்றும் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை அறவே தவிர்க்கப்படும். மேலும் நள்ளிரவு நேரங்களில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள வருகை புரிவதால் பயணிகளுக்கு தவிர்க்க முடியாத சிரமம் ஏற்படுகிறது.

44
முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
Image Credit : our own

முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ளளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்கிட வழிவகை செய்யப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறோம். எனவே பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து எந்தவித சிரமமின்றி பயணம் செய்திட அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பேருந்து
சென்னை
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(12.4 ov)130/3
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை டூ திருச்சி இனி 3.30 மணி நேரத்தில் போகலாம்.. 130 கிமீ வேகத்தில் ரயில்கள்.. மாஸ் அப்டேட்!
Recommended image2
School Leave Today: விட்டாச்சு லீவு.! 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.! கனமழையால் வந்த அதிரடி உத்தரவு
Recommended image3
Uzhavar Santhai Vegetable Price: கீரை ரூ.10, தேங்காய் ரூ.25.! மூட்டை மூட்டையாய் காய்கறிகள் Sale.! உழவர் சந்தையில் குயியும் இல்லத்தரசிகள்.!
Related Stories
Recommended image1
கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்த்த பாடில்லை; எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
Recommended image2
வைகாசி விசாகம்: நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved