முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க, மற்றொரு பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் குழுவினரும் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, 3வது முறையாக சென்னை வந்து சிகிச்சை மேற்கொண்டு, கடந்த 26ம் தேதி நாடு சென்றார். அதேபோல், எய்ம்ஸ் டாக்டர் கில்நானியும் டெல்லி திரும்பினார். இதனை தொடர்ந்து லண்டன் டாக்டரின் மருத்துவ ஆலோசனையின் பேரில் அப்பல்லோ டாக்டர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

2 நாட்கள் லண்டனில் தங்கிய டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, நேற்று முன்தினம் தீபாவளி அன்று சென்னை வந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று 40வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவர், நேற்று மாலை சிங்கப்பூர் புறப்பட்டார்.

இதேபோல், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்த சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் சீமாவும், அவருடன் மற்றொரு பெண் பிசியோதெரபி நிபுணரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை வந்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.