தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது, வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது, வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.

நாடு முழுவதும் இப்போது பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயித்து வருகின்றன. நாள்தோறும் 5 பைசா, 8 பைசா என்று ஏறிய விலை இன்று கிர்ரென்று ஏறி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 26 காசுகள் அதிகரித்து 101 ரூபாய் 27 காசுகளாக இருக்கிறது. டீசல் விலையும் உயர்ந்திருக்கிறது. லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து வாகன ஓட்டிகளை தலை தெறிக்க ஓடவிட்டு இருக்கிறது.

ஒரு லிட்டர் டீசல் விலை 96.93 காசுகளுக்கு வந்திருக்கிறது. தொடரும் இந்த விலை சாதாரண, நடுத்தர மக்களை கொதிப்பிலும், அதிர்ச்சியிலும் கொண்டு போய் விட்டிருக்கிறது. இத்தனைக்கும் தமிழக அரசு 3 ரூபாய் பெட்ரோல் விலையை குறைத்தும் கிட்டத்தட்ட 102 ரூபாயை எட்ட உள்ளது.

தொடரும் விலை உயர்வால் அவதிக்கு ஆளாகி வரும் சாமானிய மக்கள் இப்போது சைக்கிளை தேடி செல்ல ஆரம்பித்துவிட்டனர். மிகவும் அத்தியாவசிய தேவைக்கும் மட்டும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தலாம் என்ற மனோநிலைக்கு வந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
