ஏ.பி.முருகானந்தத்தின் துப்பாக்கி லைசென்ஸை ரத்து கோரி ஆட்சியரிடம் மனு!
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தின் துப்பாக்கி லைசென்ஸை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது
பாஜக மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் ஏ.பி.முருகானந்தம். கோவையை சேர்ந்த இவரது பெயர் தமிழிசைக்கு பிறகு, பாஜக மாநிலத் தலைவருக்கான பரிசீலனையில் இருந்தது. அந்த அளவுக்கு கட்சியில் செல்வாக்கு மிக்கவர். மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு நெருக்கமானவராகவும் இருந்து வருகிறார்.
கீழ்வெண்மணி நினைவுச் சின்னம் கேலிக்குரிய அவமானம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!
இந்த நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தின் துப்பாக்கி லைசென்ஸை ரத்து செய்யக்கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கந்தசாமி என்பவர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்துள்ள மனுவில், ஏ.பி.முருகானந்தத்தின் மீது ஏற்கனவே 8க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும், 4 சிஎஸ்ஆர் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழங்கியுள்ள குறிப்பானையின் நகலையும் தனது மனுவுடன் அவர் இணைத்துள்ளார்.
மேலும், ஏ.பி.முருகானந்தத்தினால் தனது உயிருக்கும், உடமைக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ள கந்தசாமி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள லைசென்ஸை ரத்து செய்யுமாறு கோரியுள்ளார்.