petition to change rk nagar case to cbi

ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் வைரக்கண்ணன் தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே. நகர் தொகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. அதிமுக அம்மா அணியின் சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாடடு எழுந்தது. 

இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையின்படி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது.

இது தொடர்பான வழக்றிஞர் வைரக்கண்ணன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் வைரக்கண்ணன் மீண்டும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், அபிராமபுரம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் எதுவும் இல்லை. ஆனால், தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரில, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ பெயர்கள் உள்ளன. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சராக இருப்பதால், போலீஸ் துறை அவரது கட்டுப்பாடடின் கீழ் உள்ளது. அதனால், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, முதலமைச்சருக்கு போலீசாரால் சம்மன் அனுப்ப முடியாது எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.