Asianet News TamilAsianet News Tamil

மக்கள் எழுப்பியுள்ள 2 முக்கிய கேள்வி..! நடக்குமா..? சிந்திக்குமா அரசு..?

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது

people raised 2 important questions about teachers protest
Author
Chennai, First Published Jan 24, 2019, 5:35 PM IST

மக்கள் எழுப்பியுள்ள ௨ முக்கிய கேள்வி..! நடக்குமா..? சிந்திக்குமா அரசு..? 

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்று வருகின்றனர். இதனால் குறைந்தபட்சம் 4 லட்சம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, பெரும்பாலோனோர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், ஒரு சிலர் சில முக்க்கிய கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
  
இது  குறித்து சமூக வலைதளத்தில் எழுப்பப்பட்டுள்ள இரண்டு முக்கிய கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

1. "வருஷம் 365 நாள் அதுல மாசத்துல உங்களுக்கு எட்டு நாள் லீவு அதுபோக அரசு விடுமுறை அதுபோக எம்எல் அப்படின்னு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அப்படி இப்படின்னு கணக்கு போட்டா வருஷத்துல உங்களுக்கு ஒரு180 தான் வேலையே.. ஒரு நாளைக்கு  6 மணி நேரம் வேலை பார்ப்பீர்கள். அதுக்கு இப்படி போராட்டமா ? உங்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்கு பதிலாக தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு செவிலியர், தமிழ்நாடு நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இப்படி 24 மணி நேரம் வேலை பார்க்கக் கூடிய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தாலும் ஒரு நியாயம் உண்டு...

மற்றொரு நபர்..!

2 . "தயவு செய்து கொடுங்கள்... தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களை தேடி கொடுங்கள்.... தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்தை இயக்க கூறியதை போல இதையும் செய்து விட வேண்டாம்... ஆனால் வேலை செய்யும் போது தெரியும் சம்பளம் போதவில்லை என்று அவர்களும் உணர்வார்கள்!!!

மேலும் இது போன்று பல்வேறு கேள்விகளை அரசுக்கு  வைத்துள்ளனர் மக்கள். ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், மற்ற துறையை சார்ந்தவர்களும் அரசு வேலை மூலமாகவும்,சம்பள உயர்வு மூலமாகவும் அவர்களும் பயன்பெற வேண்டும் என பலரும் கருத்து  தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios