அவனியாபுரம் அருகே போர் போட்டு தண்ணீர் எடுப்பதால் மாநகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் ஊழியருடன் சேர்த்து அலுவலகத்திற்கு பூட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், கற்பக நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அதிகாரிகள் போர் போட்டு லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.

வழக்கம்போல் இன்றும் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் தண்ணீர் நிரப்ப லாரிகளில் வந்தனர்.

இந்நிலையில், போர் போட்டு லாரிகளில் தண்ணீர் எடுப்பதால் அப்பகுதிகளில் மிகவும் குடிநீர் தட்டுபாடு நிலவுவதாகவும், நிலத்தடி நீர் மட்டம் குறைவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாநகராட்சி ஊழியர்களை உள்ளே வைத்து மாநகராட்சி அலுவகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் திருப்பூரில் செவந்தம்பாளையம் பகுதியில் 4 மாதமாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை என கூறிஅப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த்துடன் அனைவரையும்,காவலர் வாகனத்திலேயே ஏற்றி சென்று செவந்தாம்பாளையம்  பகுதியில் விட்டு சென்றனர்.