People in Tiruvallur have a short day meeting 185 petitions received from the same day
திருவள்ளூர்
திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஒரே நாளில் 185 மனுக்களைப் பெற்றுக் கொண்டார் ஆட்சியர் சுந்தரவல்லி.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி பங்கேற்று மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த மக்கள் முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடபட்டோருக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து இருந்தனர்.
மக்களிடம் இருந்து மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் சுந்தரவல்லி, மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவும் இட்டார்.
