Tasmac: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலை உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக புதுச்சேரி எல்லையோர மதுபான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தை விட புதுச்சேரியில் குறைந்த விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் எல்லையோரங்களில் மதுப்பான கடத்தலை தவிர்ப்பதற்கு காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tasmac: புதுச்சேரியில் தமிழகத்தை விட குறைவான விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்கிருந்து தமிழகத்துக்கு மதுபானங்களை கடத்தும் நிலை இருந்தது. இதனால் தமிழக - புதுச்சேரி எல்லைகளில் காவல்துறை தொடர் தீவிர கண்காணிப்பு ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு மதுபானங்கள் மீது விதிக்கும் கலால்வரியை கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உயர்த்தியது. அந்த ஆண்டே மீண்டும் கலால்வரியை மீண்டும் புதுச்சேரி அரசு உயர்த்தியது.

அதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று காரணமாக கொரோனா வரி, சிறப்பு வரி விதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு இணையான விலை புதுச்சேரியிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தல் மற்றும் அங்கு படையெடுக்கும் மக்கள் கூட்டமும் குறைந்ததாக சொல்லப்பட்டது.
மதுபானக்கடை:
மேலும் புதுச்சேரியில் மொத்தம் 5 மதுபான தொழிற்சாலைகளும் 85 மொத்த வியாபார உரிமங்களும், 500-க்கும்மேற்பட்ட சில்லரை வியாபார உரிமங்களும் உள்ளன. இவை அனைத்தும் தனியார் நிறுவனங்களே நடத்தி வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் மதுபானங்களின் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மதுபான உற்பத்தியாளர்களே விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். இச்சூழலில் மதுபானங்கள் மீதா கலால்வரி வசூல் செய்வது, வரி ஏய்ப்பை தடுப்பது போன்ற பணிகளை மட்டுமே அரசு செய்து வருகிறது.
மேலும் படிக்க: Gold Loan waiver: மீண்டும் ஒரு தணிக்கை.. உத்தரவு போட்ட கூட்டுறவு துறை.. தள்ளிப்போகும் நகைக்கடன் தள்ளுபடி..
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மதுபான விலை உயர்ந்துள்ளதால், மீண்டும் தமிழகம் - புதுச்சேரி நோக்கி படையெடுக்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மதுபானங்கள் விலை தற்போது தமிழகத்தில் உயர்ந்துள்ள சூழலில் தமிழக எல்லையோரம் உள்ள புதுச்சேரி மதுபானக்கடைகளில் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அத்துடன் மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளதால் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளிலும் மக்கள் தேடிச் செல்ல ஆரம்பித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
விலை நிர்ணயம்:
ஆண்டு ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் ஐ.எம்.எப்.எல் மதுபான பெட்டிகள் புதுச்சேரி மதுபான தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தவிர வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 25 லட்சம் மதுபான பெட்டிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6000 கோடியிலிருந்து ரூ.9000 கோடி வரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கலால் வரி, உரிமைக் கட்டணம் ஆகியவைகளின் மூலம் சுமார் 900 கோடி ரூபாய் அளவில் தான் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை போல புதுச்சேரியிலும் மதுபானங்கள் அரசே கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர், மேலும் புதுச்சேரியிலும் அரசு நிறுவனம் ஒன்றை நிறுவி அதன்மூலம் கொள்முதல் செய்து கடைகளுக்கு விற்பனை செய்யவேண்டும் எனவும் இதனால் அரசுக்கு ரூ.800 கோடியிலிருந்து ரூபாய் 1000 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
