மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்... பன்றி காய்ச்சல் குறித்து மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!!
பன்றி காய்ச்சலுக்கு பொதுமக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
பன்றி காய்ச்சலுக்கு பொதுமக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி !! பள்ளிக்கூடத்திற்கு போக சொன்னதால் விபரீதம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்..
மேலும், 89 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 264 பேர், அரசு மருத்துவமனைகளில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும், எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பெற்றோர்கள் காய்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, காய்ச்சல் சரியாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10% ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்.! எஸ்.ஆர்.எம்.யூ எதிர்ப்பு... மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அரசு முறை பயணமாக தமிழகம் வந்த மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சேம்ஸ் ஜே.கே.சங்கமா தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியனை சந்தித்தார். அப்போது மேகாலயா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.