அதிர்ச்சி !! பள்ளிக்கூடத்திற்கு போக சொன்னதால் விபரீதம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்..

சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 8 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

A student hanged himself without wanting to go to school

சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார்நகர்‌ பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான சிவகுரு. இவரது மகன் அரசகுரு. அங்குள்ள தனியார்‌ பள்ளியில்‌ 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்லமால் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பள்ளி படிப்பை தொடர தனக்கு விருப்பமில்லை என்று அரசகுரு தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர்கள்‌ அரசகுருவை சமாதானம்‌ செய்து பள்ளிக்கு அனுப்பும்‌ முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளிக்கு செல்ல வேண்டும்‌ என்று பெற்றோர்கள்‌ கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: 10% ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்.! எஸ்.ஆர்.எம்.யூ எதிர்ப்பு... மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்

இந்நிலையில் நேற்றிரவு வீட்டின்‌ அருகே உள்ள உறவினர்‌ வீட்டிற்கு சென்ற அரசகுரு, அங்குள்ள அறைக்கு சென்று  தூக்கிட்டுத்‌ தற்கொலை செய்து கொண்டுள்ளார்‌. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பெற்றோருக்கு தகவல்‌ தெரிவித்தனர்‌. தூக்கில் சடலமாக தொங்கிய மகனின் உடலை பார்த்து பெற்றோர்கள்‌ கதறி அழுதனர். 

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஸ்தம்பட்டி காவல்‌ துறையினர்‌, மாணவனின்‌ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம்‌ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. மேலும்‌ இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து,  மாணவன்‌ தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:அரசு பள்ளி மாணவிகள் கடும் மோதல்.. உள்ளே புகுந்து பெற்றோர்கள் தகராறு.. 4 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு..

பள்ளியில்‌ மாணவனுக்கு ஏதாவது பிரச்னை இருந்து வந்ததா அல்லது வேற ஏதாவது காரணங்கள்‌ உள்ளதா என்று பல்வேறு கோணங்களில்‌ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios