திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை வரை விடாது மழை பெய்ததால் மக்கள், விவசாயிகள் மகிச்சியில் திளைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவியது.

விவசாயம் செய்ய போதிய தண்ணீர் கிடைக்காமல் அல்லல் பட்ட மக்களுக்கும், நாளுக்கு நாள் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு நிலைமை மோசமானது.

குடிநீர் கேட்டு மக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் என போராடியும் அவர்களது தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.

இதனால், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக செங்கம், சாத்தனூர் அணை பகுதியில் 36.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 2.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.