Special Teachers Salary Hike: சிறப்பு ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சொன்னபடி ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு.!
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பயிற்றுவிக்க அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பயிற்றுவிக்க அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் ஊதியம் உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் பேசியது என்னாலே பொறுத்துக் கொள்ள முடியல! இந்த விஷயத்தில் அரசு எடுத்த நடவடிக்கை சரி! TTV.தினகரன்
அதன்படி சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024 25 நிதியாண்டில் திட்டத்திற்கு ரூ.21.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் 1,009 பேர் பயனுடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன ஒரு தைரியம் பாத்தியா? கிரிவலப் பாதையில் பெண் செய்த காரியம்! ரவுண்ட் கட்டிய பொதுமக்கள்.. நடந்தது என்ன?