Asianet News TamilAsianet News Tamil

எட்டாவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனின் சிகிச்சைக்காக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Parole extension for Perarivalan
Author
Tamilnádu, First Published Jan 22, 2022, 6:11 PM IST

ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன் சுமார் 26 ஆண்டுகள் கழித்து கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஒருமாத பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

முதல் முறை பரோல் முடிந்து சிறைக்கு செல்லும் நிலையில், அவரது தந்தையின் உடல்நிலை காரணமாக மேலும் முப்பது நாட்கள் அவருக்கு பரோல் விடுப்பு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்பு மீண்டும் சிறைக்குச் சென்ற பேரறிவாளன், கடந்த 2019 நவம்பர் மாதம் 12ஆம் தேதி மீண்டும் அவரது உடல் நலம் மற்றும் அவரது சகோதரியின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.

இதையடுத்து அவரது சிறுநீரக நோய் தொற்று சிகிச்சைகாக 2020 அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி மூன்றாவது முறையாக ஒருமாத பரோல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தன்னுடைய மகனின் உடல்நிலை சிகிச்சைக்காக 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். அதன் பேரில் கடந்த மே மாதம் 28ஆம் ஆம் தேதி ஒருமாத பரோல் விடுப்பு வழங்கப்பட்டது.

இந்த பரோல் நாளையுடன் முடிவுற இருந்த நிலையில், எட்டாவது முறையாக மீண்டும் பேரறிவாளனின் உடல்நல குறைபாட்டின் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios