நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; திமுக எம்.பி-கள் முன்வைத்த முக்கிய கேள்விகள்!
DMK MPs : இன்று நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் திராவிட முன்னேற்ற கழக எம்.பி-கள் முன்வைத்த கேள்விகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், திராவிட முன்னேற்றக் கழக எம்.பி-க்கள் சில கேள்விகளை முன் வைத்தனர். அதன்படி திமுக எம்பி பி. வில்சன் எழுப்பிய கேள்வியில் "சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கின்ற கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் எப்போது சென்னைக்கு வரும் என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார். மேலும் அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்றும் அந்த வழித்தடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்கின்றது குறித்தும் விவரம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து விமான கட்டணம் அதிகரிப்பு குறித்து திராவிட முன்னேற்றக் கழக எம்.பி திரு தயாநிதி மாறன் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அவர் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த ஆண்டு ஒப்பிடும் பொழுது விமான பயணச்சீட்டினுடைய குறைந்தபட்ச விலை ஆனது சுமார் 40 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வதாக அவர் கூறியிருந்தார்.
"நீங்க 200 கோடினா; நான் 2000 கோடி" மீண்டும் விஜயை வம்பிழுக்கும் சீமான்!
குறிப்பாக விமானங்களுக்கான தேவை அதிகமான உள்ள காலங்களில் விமான கட்டிடத்திற்கு ஒன்றிய அரசு உச்ச வரம்பு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிலத்தடி நீர் மாசடைவது குறித்த விஷயத்திற்கான தீர்வு என்ன என்பது குறித்த கேள்வியை திராவிட முன்னேற்றக் கழக எம்பி கனிமொழி முன்வைத்தார்.
அவர் பேசிய அறிக்கையில் இந்தியா முழுவதும் எடுக்கப்படும் நிலத்தடி நீரில் காணப்படுகின்ற அர்சனிக் மற்றும் ஃளூரைடு மாசுக்கட்டுப்பாட்டை உடனடியாக அதீத தீவிர பிரச்சினையாக எடுத்துக் கொண்டு ஒன்றிய அரசு அதற்கான தீர்வு எடுக்க வேண்டும் என்று, இன்று மக்களவையில் நடந்த குளிர்கால கூட்ட தொடரில் கனிமொழி கேட்டுக்கொண்டார். அதேபோல நாட்டில் இப்போது செயலில் உள்ள அணுமின் திட்டங்கள் எத்தனை? அது குறித்த அனைத்து புள்ளி விவரங்களையும் ஒன்றிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம்; தமிழகத்தில் செயல்படுத்த முடியாது - கனிமொழி திட்டவட்டம்!