pan gutka ceased in chennai
சென்னை சூளையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா மற்றும் பான்மசாலாவை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

சென்னை சூளையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோனில் 100 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
