பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முன்பதிவு விவரங்கள் வெளியீடு
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 27ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 18ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் வருகின்ற 27ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக இணைதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்களை மட்டுமே குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
தூத்துக்குடியில் வரதட்சணைக்காக பெண் கொலை? காவல் துறையினர் விசாரணை
திருக்கோவில் இணைதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் இத்துறை வலைதளமான www.hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களின் மூலம் பக்தர்கள் வருகின்ற 18ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர், மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தக் கொள்ளலாம். கட்டணமில்லா முன்பதிவு செய்வதற்கு பக்தர்கள் கீழ்கண்ட ஏழு சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சான்றாகக் கொண்டு
1 நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை (Pan Card)
2 வாகாளர் அடையாள அட்டை
3 பாஸ்போர்ட்
4 நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு
5 ஓட்டுநர் உரிமம்
6 குடும்ப அட்டை
7 ஆதார் அட்டை
தங்களது கைப்பேசி எண்ணுடன் மின்னஞ்சல் முகவரி இருப்பின் விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவில்பட்டியில் உதவி ஆய்வாளருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்
பதிவு செய்யப்படும் நபர்களில் 21ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி/கைபேசி எண்ணிற்கு 22ம் தேதி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.