கோவில்பட்டியில் உதவி ஆய்வாளருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்
கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழிக்கு சக காவலர்கள் இணைந்து டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தினர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அருள்மொழி. இவரது கணவர் சதீஷ்குமார் கழுகுமலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 7 மாத கர்ப்பிணியாக உள்ள அருள்மொழிக்கு காவல் நிலையத்திலேயே சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தனர்.
இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. 3,184 சீருடை பணியாளர்களுக்கு பதக்கம் அறிவிப்பு..!
இதைத் தொடர்ந்து டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சுஜீத் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் அருள்மொழிக்கு வளைகாப்பு வைபவத்தை வெகு விமரிசையாக காவல் நிலையத்திலேயே நடத்தினர். வீட்டில் உறவினர்கள் நடத்துவதை போன்று அருள்மொழிக்கு வளையல்கள் அணிவித்து சந்தனம், குங்குமம் வைத்து சீர்வரிசைகள் கொடுத்து விருந்து உபசாரம் செய்து குடும்ப நிகழ்ச்சியாக நடத்தினர்.
போகிப் பண்டிகை கொண்டாட்டம்.. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு.. வாகன ஓட்டிகள் கடும் அவதி..!
கைகளில் காப்பு மாட்டியே கண்டு பழக்கப்பட்ட காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளருக்கு டிஎஸ்பி முதல் காவலர்கள் வரை அனைவரும் பாசத்துடன் வீடுகளில் குடும்பத்தினர் செய்வது போன்றே வளைகாப்பு நடத்தியது பெண் காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.