pakkoda sales by Lawyers in the Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆவின் நுழைவு வாயில் அருகே பக்கோடா விற்று வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி சாலையில் சிலர் பகோடா விற்பதாக கூறி விளக்கமளித்தார்.
இதனை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மோடி செல்லும் இடங்களில் பகோடா செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராகும்போது, பகோடா விற்பவரின் மகன் ஏன் தொழிலதிபராக வரக்கூடாது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா பேசினார்.
பகோடா விற்பதை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்களை விமர்ச்சித்த அவர், வேலை இல்லாமல் இருப்பதற்கு பகோடா விற்பது சிறப்பான பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆவின் நுழைவு வாயில் அருகே பக்கோடா விற்று வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைவாய்ப்புக்கு வழி ஏற்படுத்தாமல் மோடி பக்கோடா விற்க சொல்வதை கண்டித்து வழக்கறிஞர்கள் இந்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
