திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு வெளியே கூடியிருக்கும் ஏராளமான தொண்டர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள தொண்டர்கள் குவிந்துள்ளனர். மருத்துவமனையை சுற்றிலும் ஏராளமான தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் காவல்துறையை அமைத்திருந்த தடுப்புகளை தூக்கி வீசி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய சில தொண்டர்கள் முற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அப்போது தொண்டர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்து ராஜாத்தியம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் செல்ல விடுமால் தொண்டர்கள் வழிநெடுக்கிலும் இருந்ததால் அப்போது தள்ளு முள்ள ஏற்பட்டது.

பிறகு இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் சிறியதாக தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.