Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் பாட்டில் திரும்பப் பெறும் திட்டம்.. அரசுக்கு கடமை இருக்கிறது.. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..

டாஸ்மாக்‌ மதுக்கடையில்‌ விற்பனை செய்யப்படும்‌ மதுபாட்டில்களை திரும்பப்‌ பெற திட்டம்‌ வகுக்குமாறு டாஸ்மாக்‌ நிர்வாகத்துக்கு சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல்‌ பாதிப்பை சரி செய்யவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்றும்‌ சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ தனது உத்தரவில்‌ குறிப்பிட்டுள்ளது.
 

Order to plan to recall Tasmag bottles throughout Tamil Nadu
Author
Tamil Nadu, First Published Jun 24, 2022, 5:41 PM IST

டாஸ்மாக்‌ மதுக்கடையில்‌ விற்பனை செய்யப்படும்‌ மதுபாட்டில்களை திரும்பப்‌ பெற திட்டம்‌ வகுக்குமாறு டாஸ்மாக்‌ நிர்வாகத்துக்கு சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல்‌ பாதிப்பை சரி செய்யவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்றும்‌ சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ தனது உத்தரவில்‌ குறிப்பிட்டுள்ளது.தற்போது நீலகிரியில்‌ அமல்படுத்துவதுபோல, டாஸ்மாக்‌ மதுக்கடைகளில்‌ விற்பனை செய்யும்‌ பாட்டில்களை திரும்பப்பெறும்‌ திட்டத்தை தமிழகம்‌ முழுவதும்‌ அமல்படுத்த திட்டம்‌ வகுக்க சென்னை உயர்‌நீதிமன்றம்‌ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க: TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!

மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ வகையில்‌ விளம்பரங்களையும்‌ வெளியிட வேண்டும்‌ என்றும்‌ அந்த உத்தரவில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலம்‌ முழுவதும்‌, மதுபாட்டில்களை திரும்பப்‌ பெறுவது தொடர்பாக திட்டத்தை வகுத்து ஜூலை 15அம்‌ தேதிக்குள்‌ அறிக்கை ஒப்படைக்க டாஸ்மாக்‌ நிர்வாகத்துக்கு சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது. நீலகிரியில்‌ மட்டும்‌ 29 லட்சம்‌ மதுபாட்டில்களில்‌ மதுபானங்கள்‌ விற்கப்பட்டதாகவும்‌ அதில்‌ 18 லட்சம்‌ மதுபாட்டில்கள்‌ திரும்பப்‌ பெறப்பட்டதாகவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதையும்‌ நீதிமன்றம்‌ சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் படிக்க:பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து... அமைச்சர் சி.வி.கணேசன் போட்ட அதிரடி உத்தரவு!!

Follow Us:
Download App:
  • android
  • ios