சென்னையிலிருந்து 5௦ கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ள  இடம் தான் ஒரகடம் மாநிலத்தின் முதலீடு குறித்து  பல  நிறுவனங்களை தொடங்க   தமிழக  அரசே மானியம்  வழங்கி  வருகிறது.

தற்போது  ஓரகடத்தில் பல   நிறுவனங்கள்  போட்டிபோட்டுக்கொண்டு மேலும் மேலும்  விரிவாக்கம்  செய்கிறது. அந்த  வகையில்,போர்டு, டி.வி.எஸ்., அப்போல்லோ, மெர்ஸிடிஸ், சுந்தரம் ஆட்டோ, ராயல் என்பீல்டு  உள்ளிட்ட  பல  நிறுவனங்கள்   ஓரகடத்தில் தான்  அமைந்துள்ளன.

இதன் காரமணாக  குடியிருப்புகள்  அதிகரித்த வண்ணம்  உள்ளது. இங்கு பணிபுரியும்  ஊழியர்களுக்காக  ஆங்காங்கே  பெரிய  பெரிய  அடுக்குமாடி  குடியிருப்புகள்  அமைக்கப்பட்டுள்ளது.பெருகி வரும் நிறுவனங்களுக்கு  ஏற்ப,  குடியிருப்புகளும்  அதிகளவில்   ஏற்படுத்தப்படுகின்றனர்.  

அடுத்த  சில  ஆண்டுகளில்  ஓரகடம்  மேலும்  பன்மடங்கு  வளர்ச்சி பெரும் என்பதால்  இங்கு  ரியல்  எஸ்டேட்  துறை  சூடு பிடிக்க  தொடங்கியுள்ளது .

சிறப்பம்சங்கள் :

NH4 தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம், முடிச்சூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரை இணைப்பதால் சுற்றுவட்டாரத்தில் ஒரகடம் மாபெரும்  நகரமாக  மாற  உள்ளது  

சுமார் 300 ஏக்கரில் Aerospace பூங்கா ஒன்று அமையவிருக்கிறது.

ஒரகடத்தையும் ஸ்ரீபெரும்புதூரையும் இணைத்துத் தொழில்துறை மண்டலத்தை விரிவாக்க,தமிழக அரசு முயற்சிகள் எடுத்து வருகிறதுஎன்பது  குறிப்பிடத்தக்கது .இதன் மூலம் 30,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.

சாம்சங், DELL போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் தங்கள் கிளைகளை ஓரகடத்தில் நிறுவ உள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது