OPS team banner occupied the road
சென்னையில் சாலையை அடைத்து ப்ளக்ஸ் பேனர் வைத்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.பேனர் என்றாலே அதிமுகவினர் தான் என்பது கடந்த கால வரலாறு.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவர் செல்லும் இடமெல்லாம் சாலையை அடைத்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பார்கள்.
இதனால போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படும் பேனர்களை அகற்றவேண்டும் என்று ட்ராபிக் ராமசாமி போன்றோர் அடிக்கடி போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஜெ மறைவுக்கு பிறகு பேனர் ஆதிக்கம் குறைந்திருந்தது. இடையில் சசிகலா பொதுசெயலாளராக பொறுப்பேற்ற பின் சிறிது காலம் பேனர்கள் ஆங்காங்கே தலை தூக்கியது.அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்று விட பேனர் ஆதிக்கம் சென்னையில் குறைந்தது.
ஆனால் தற்போது ஓபிஎஸ் அணியினர் நடத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்சிக்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அமைந்துள்ள சாலையில் பொதுமக்கள் செல்லும் நடைபாதை எண்டும் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
