DMK ELELCTION WIN : திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு செக்.! ஓபிஎஸ், நயினார், விஜயபிரபாகர் அதிரடி
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களை கைப்பற்றிய நிலையில், தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் திமுக வெற்றி
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவைர 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்தநிலையில் பாஜக கூட்டசியில் போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வம், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், விருதுநகர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட விஜயபிரபாகர் தங்களது தோல்வியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
வெற்றிக்கு எதிராக களம் இறங்கிய வேட்பாளர்கள்
அந்த வகையில், ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, நாளையுடன் 45 நாட்கள் அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலை வழக்கு தொடர்ந்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியிடம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நவாஸ்கனியின்தேர்தல் வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இதற்காக அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து, பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதே போல திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புருஸிடம் தோல்வி ஒரு லட்சத்து 65ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நேரில் வந்து நயினார் நாகேந்திரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரிடம் வெற்றி பெற்றார். இந்தநிலையில் விஜய பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நேரில் வந்து தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.