வறட்சி காரணமாக தொடர் தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிகளின் குடும்பத்தின் நலனை கருதி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வறட்சி பாதித்த அனைத்து மாவட்டங்களுக்கும் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

குறிப்பாக பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனகளிடமிருந்து காப்பீட்டு தொகை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்கும்.

முற்றிலும் கருகி போன பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 கொடுக்கப்படும்.

கரும்புக்கு காப்பீடு தொகையாக  ஒன்றுக்கு ஏக்கருக்கு 45,000 ரூபாயும்,

நெல் மகசூலில் ஏக்கருக்கு 80% சேதமடைந்திருந்தால் 20,000 ரூபாயும்

60% சேதமடைந்திருந்தால்  15,000 ரூபாயும் 33% சேதமடைந்திருந்தால் 8250 ரூபாயும்

மஞ்சளுக்கு காப்பீடுக்கு தொகை செய்திருந்தால் 50,000 ரூபாயும்

கால்நடை தீவன தட்டுபாட்டை போக்க ரூ.78 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ரூ.3400 கோடியில் ஏரி, குளங்கள் சீரமைகப்படும்.

கிராமப்புற வேலை உறுதி திட்டம் 100-லிருந்து  150 நாளாக உயர்த்தப்படும்

சேதமடைந்த நெல் பயிர் ஏக்கருக்கு ரூ. 5645 வழங்கப்படும்.

கம்பு சோளம் போன்ற மானாவரி பயிருக்கு  ரூ.3000 வழங்கப்படும்

விவசாயிகளின் நிலவரி முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.