only one way in chennai beach station

சென்னை பீச் ரயில் நிலையத்தில்...! வழியை அடைத்து டீ கடை...தண்ணீர் கடைக்கு அனுமதி..?!

சென்னை வடக்கு கடற்கரை சாலை ரயில் நிலையத்தில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு 8 பிளாட்பாரங்கள் உள்ளது..ஆனால் ஒரே வழி மட்டும் விடப்பட்டு உள்ளதால் பயணிகள் தொடர் அவஸ்தை அனுபவித்து வருகின்றனர்.

அசம்பாவிதம்

இந்த ரயில் நிலையத்தில் எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் பயணிகள் அவசர கதியில் வெளியேற முடியாத நிலை உள்ளது

காலையில் பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்,வேலைக்கு செல்லும் பல்லாயிரம் பேர்அந்த ஒரு வழி பாதையில் மட்டுமே அடித்து பிடித்து செல்லும் நிலை உள்ளது!

ஒரு பக்கம் கேட் அடைத்து தண்ணீர் விற்பனை நடக்கிறது...மறு பக்கம் கேட் அடைத்து டீ கடை ஒடுகிறது...

இதற்கெல்லாம் அனுமதி கொடுத்தது யார்..? எப்படி ஒரே ஒரு வழி மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. விடை தெரியாமல் பல்லாயிர கணக்கான மக்கள் பெரும் அவதி பட்டு வருகின்றனர்

தினமும் இந்த இன்னலை சந்தித்து வரும் சக பயணி ஒருவர், இதனை படம் எடுத்து அவருடைய வேதனையை தெரிவித்து உள்ளார்.

ரயில்வே நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்பதே அனைத்து பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.