வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும்: பிரதமருக்கு மனோ தங்கராஜ் பதில்!
திமுக குறித்த பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், "வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும்" என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் பேசிய பிரதமர் மோடி இன்று சேலத்தில் பேசிய பேச்சுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையான பதில் அளித்துள்ளார். பிரதமரின் பேச்சை வெட்கமே இல்லாத பேச்சு என்று விமர்சனம் செய்துள்ளார்.
திமுக குறித்த பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், "வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும்" என்று காட்டமாகக் கூறியுள்ளார். மேலும், திமுக குடும்ப அரசியல் செய்வதாக பிரதமர் கூறியதற்கும் மனோ தங்கராஜ் பதில் கொடுத்துள்ளார்.
"மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி அனந்தன் மகள் தமிழிசை ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று மோடி பேசுவது அவரின் அதீத நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு" என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
அடிக்கடி வந்து புலம்பும் மோடி... தகுதிக்கு ஏற்ப பேசுகிறாரா?: பதிலடி கொடுத்த டி.ஆர்.பாலு!
திமுக பொருளாளரும் மக்களவை எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவும் பிரதமரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். "மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்" என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர மோடி, "திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இரண்டு கட்சிகளும் தொடர்ந்து ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
"காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு தான் 5ஜி தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுடைய 5ஜி என்பது திமுகவின் ஐந்தாம் தலைமுறை குடும்பம் ஆட்சி நடத்துவதுதான்" என்றும் கூறினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் சரத்குமார் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுகவில் யாருக்கு எந்தத் தொகுதி? வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!