Asianet News TamilAsianet News Tamil

மந்திர பெட்டியை தொட்டா 5000 வரை Cashback.. பிரதமர் படத்தோடு வந்த விளம்பரம்.. அம்பலமான நூதன மோசடி - உஷார்!

New Online Scam : இந்த டிஜிட்டல் யுகத்தில், கையில் செல் போன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நாடு வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஆன்லைன் மூலம் பணத்தை தினுசு தினுசாக திருடும் கும்பல்களும் அதிகரித்துக்கொண்டு தான் வருகின்றனர்.

online scam using pm modi photo and bharat jan dhan yojana scheme ans
Author
First Published Mar 4, 2024, 4:35 PM IST

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் மக்களிடமிருந்து பணத்தை அபகரிக்க மோசடி கும்பல்களும் மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல் யுக்திகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர் என்று கூறினால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு மோசடி கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் இரு வேறு பகுதிகளில் நடந்த ஆன்லைன் மோசடிகள் குறித்து இப்பொழுது பார்க்கலாம். 

அதிலும் குறிப்பாக "பாரத் ஜன் தன் யோஜனா" என்கின்ற மத்திய அரசின் திட்டத்தை போலியாக உருவகப்படுத்தி, அந்த கும்பல் மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சியை சேர்ந்த ஒருவர் பிரியாணி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், அவருடைய முகநூல் பக்கத்தில் ஒரு வித்தியாசமான செய்தி ஒன்றை படித்திருக்கிறார். 

கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது - ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!

அதில் பாரத் ஜன் தன் யோஜனா திட்டத்தில் இணைவதன் மூலம் 4999 ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி அவர்களுடைய புகைப்படத்தை பயன்படுத்தி  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அவரும் அதை நம்பி அவரது Paytm கணக்கு மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க, அதன் பிறகு வந்த OTPயையும் அதில் பதிவு செய்துள்ளார். உடனடியாக அவருடைய கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

அதேபோல தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு துணிக்கடை தொழிலாளருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. பாரத் ஜன் தன் யோஜனா திட்டம் குறித்த ஒரு செய்தியை அவர் முகநூல் பக்கத்தில் பார்த்திருக்கிறார். அதன் கீழே இந்த மந்திர பெட்டியை தொட்டவுடன் பிரதமர் மோடி அவர்கள் உங்கள் வங்கி கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை நம்பி அவரும் அதைத் தொட, உடனே ஒரு otpயை பகிர்ந்து கொள்ளுமாறு அந்த லிங்க் சென்றுள்ளது. அதன் பிறகு தனது வங்கி தகவல்களையும் கொடுத்து சுமார் 2000 ரூபாய்க்கும் மேல் பணத்தை அவர் ஏமார்ந்துள்ளார். இதுபோல அரசு திட்டங்களை போலியாக உருவகப்படுத்தி பிரதமருடைய புகைப்படத்தையே பயன்படுத்தி போலியான வெப்சைட்டுகளை உருவாக்கி மோசடி கும்பல்கள் மோசடி செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

5 ஆண்டுகளில் பேஸ்புக்கில் அதிகம் விளம்பரம் செய்த கட்சிகள்: முதலிடத்தில் பாஜக.. திமுகவும் லிஸ்டில் இருக்கு..!

Follow Us:
Download App:
  • android
  • ios