OLX ல் வெளிநாட்டு பைக்குகளை குறைந்த விலைக்கு விறபனை செய்வதாக விளம்பரப்படுத்தி பல இளைஞர்களை லட்சக்கணக்கில் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ரவீந்திரராஜ் என்பவர் வெளிநாட்டு பைக் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக தனக்கு தெரிந்த நண்பர்களிடம் சொல்லிவைத்தார். பின்னர் வலை தளங்களிலும் தேடி வந்தார்.
இந்நிலையில் OLX ல் ஒருவர் விளம்பரம் செய்திருந்தார். அதில் ஒரு விளம்பரத்தை பார்த்தார். அதில் நீங்கள் வெளிநாட்டு பைக்கை மலிவாக வாங்க வேண்டுமானால் என்னை அணுகுங்கள் என்று ஒரு நபர் போன் நம்பரை கொடுத்திருந்தார்.

இதையடுத்து ரவீந்திர ராஜ் அந்த நம்பருக்கு போன் செய்தார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் என்ன வகையான பைக் வேண்டும் என்று கேட்டு அதன் எஞ்சின் திறன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தன்னிடம் உள்ள வெளிநாட்டு மோட்டார்சைக்கிள்கள் பற்றியும் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் அந்த வாகனம் இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் இருந்தால் அதில் பாதிதொகை கொடுத்தால் போதும் உங்களுக்கு மோட்டார் சைக்கிள் தருகிறேன் என்று கூறியுள்ளார். அட்து எப்படி உங்களால் அவ்வளவு குறைவாக தர முடியும் என்று கேட்ட போது எங்கள் மாமா கஸ்டம்சில் பெரிய அதிகாரி அதனால் டாக்ஸ் இல்லாமல் நான் வாங்கித்தருவேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் நேரில் சந்திக்க வேண்டும் என ரவிந்தரராஜ் கேட்ட போது எங்க மாமா ஆஃபிஸ்ல தான் இருப்பேன் என்று பாரிமுனையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகம் அருகே வரச்சொல்லி இருக்கிறார். அங்கு வந்த அவரை டிபிடாப்பாக ஒரு வாலிபர் சந்தித்து கைகுலுக்கி உள்ளார். தனது பெயர் வாசிம் இர்ஷாத் என்று கூறியுள்ளார். அவரது தோற்றம் பேச்சு எல்லாம் செல்வந்தர் வீட்டு பிள்ளை போல் காட்சி அளிக்கவே அவர் சொன்னதை ரவீந்தரராஜ் அப்படியே நம்பி விட்டார்.
உங்களை மாதிரி நிறையபேர் மோட்டார் சைக்கிள் கேட்கிறார்கள் நான் நம்பி வாங்கித்தரணும் என்றால் நீங்கள் அட்வான்சாக ஒரு தொகை கட்டணும் அப்போது தான் நான் முதல் கட்டமாக பைக் வந்தவுடன் உங்களுக்கு தருவேன் இல்லாவிட்டால் அப்போதைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு தர வேண்டி இருக்கும் என்று கூறவே அவர் சொன்னதை நம்பி ரவீந்தரராஜ் தன்னிடமிருந்த ரூ.50 ஆயிரத்தை முன் பணமாக கட்டியுள்ளார்.
பின்னர் பல மாதங்களாகியும் மோட்டார் சைக்கிள் பற்றி பணம் வாங்கிய வாசிம் இர்ஷாத் மூச்சே காட்டவில்லை. இது பற்றி பல முறை கேட்டும் வாசிம் தட்டி கழித்து வந்துள்ளார். பின்னர் தலைமறைவாகி விட்டார். இது பற்றி கொடுத்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசிம் இர்ஷாத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் வாசிம் பதுங்கி இருப்பதாக அறிந்து அங்கு சென்று அவரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அம்பத்தூர் விஜயலட்சுமி நகரை சேர்ந்த , வாசிம் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்தவர் என்பதும் , ஏர் இந்தியாவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும் பண ஆசையால் அதை விட்டு இது போன்று போலியாக விளம்பரம் செய்து இதுவரை 25 க்கும் மேற்பட்டோரிடம் பணமோசடியில் ஈடுபட்டதை ஒத்துகொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் 2012 ஆம் ஆண்டு இதே போல் வெளிநாட்டு செல்போன் வாங்கித்தருவதாக மோசடி செய்து சிக்கி ஒரு வருடம் ஜெய்லில் இருந்துள்ளார். பின்னர் வெளியே வந்த அவர் பெங்களூருக்கு சென்றுள்ளார். அங்கு அரவிந்தன் எனபவருடன் பழக்கமாகி உள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து இதே போன்று மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் அரவிந்தன் ரூ. 40 ஆயிரம் மோசடி செய்ததாக சிக்கினார்.
பின்னர் உஷாரானா வாசிம் இர்ஷாத் பேரம் பேசுபவர்களிடம் தனது வங்கி அக்கவுண்டை கொடுத்து அதில் பணம் ப்பொட சொல்வாராம். வங்கி அக்கவுண்ட் இருப்பதால் ஆள் ஓட மாட்டார் என நம்பி பலரும் பணம் போடுவார்களாம். இதன் மூலம் மோசடி செய்து மாதம் ரு.2 லட்சம் வரை சம்பாதிப்பது உண்டாம்.
சேலத்தை சேர்ந்த விஜயலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் விஜய் எனபவரிடம் ரூ4.5 லட்சம் மோசடி செய்ததாக அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதே போல் டாக்டர் ஆதித்யா என்பவரை ஏமாற்றி பலலட்சம் கறந்துள்ளார்.
இதையடுத்து வாசிம்மின் போன் நம்பரை எடுத்த போலீசார் அவனது காபரே காதலி ஒருத்தியை பிடித்து அவள் மூலம் பெங்களூருவில் வைத்து இர்ஷாத்தை பிடித்துள்ளனர்.
OLX ல் விளம்பரம் கொடுக்கும் போதே அந்நிறுவனம் முன் தொகை கொடுப்பதோ , பணம் வாங்காமல் பொருளை கொடுப்பதோ கூடாது என தெரிவித்துள்ளனர். விசாரிக்காமல் எந்த பொருளையும் வாங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
