ரியல் எஸ்டேட் துறை தற்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.வீடு,வீட்டு மனைகள் , அடுக்குமாடி குடியிருப்புகள் என எதை வாங்கினாலும் விற்றாலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் கொண்டு பதிவு செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும்  தெரியும் .

சுலபமான முறையில் பத்திரபதிவு பதிவை  சுலபமாக செய்வதற்காக  இதற்குமுன்னதாக நாகபட்டினம்,பெரம்பலூர்  உள்ளிட்ட தமிழ்நாடு  முழுவதும் 9 சார்பதிவாளர் அலுவலங்களில் ஆன்லைன்  பத்திரபதிவு முறையை அறிமுகம் செய்யப்பட்டு  இருந்தது.

41 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன்  பத்திரபதிவு

திருச்சி , புதுக்கோட்டை மாவட்டம், கரூர் மாவட்டம், தஞ்சாவூர் பதிவு துறை மண்டலம் உட்பட தமிழ்நாடு முழுவதும், 41 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை  தற்போது நடைமுறைக்கு  வந்துள்ளது.

வழக்கமான முறைகலிலும்  பத்திரபதிவு  நடைபெறுமா? 
ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்துடன், ஏற்கெனவே உள்ள வழக்கமான நடைமுறைகளின்படியும் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பது  குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆன்லைன்  பத்திரப்பதிவு முறை  முழுமையாக நடைமுறைக்கு வந்தவுடன், பழமையான முறைகள்  பின்பற்றப்படாது  என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆன்லைன் பத்திரப்பதிவில் என்ன பயன் ? 

வழக்கமான  முறையில் பத்திரப்பதிவு  செய்யும் போது, நீண்ட நேரம் காத்திருப்பது, அலுவலக நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதம்,பத்திர பதிவு மற்றும் ஆவணங்களை பெறுவதில் உண்டாகும் தாமதம் என பலமணி  நேரம்  காத்திருக்க  நேரிடும்.  ஆனால் ஆன்லைன்  பத்திரபதிவு மூலமாக  பதிவு செய்யும் போது நேரமும் வீணாகாது, போலியான  ஆவண பதிவுகளையும்  தடுக்க  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.