மலையாள மொழி பேசும் மக்களின் வசந்த விழாவான திருவோண பண்டிகை கேரளாவை போன்றே கன்னியாகுமரி,நீலகிரி, கோவை  மாவட்டங்களிலும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது  

கேரளாவின் வசந்த விழா என்றழைக்கப்படும் ஓணம்  பண்டிகை ஆவணி மாதம் அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கி பத்தாவது நாள் திருவோண பண்டிகையாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய ஓணம் பண்டிகை, ஒன்பது நாட்களும் வீடுகள் மற்றும் கோவிகளில் விதம் விதமான பூக்களால் அத்தபூ கோலங்கள் இட்டு கேரள மக்கள் கொண்டாடி வந்தனர்.

மாவேலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக பத்தாவது நாள் திருவோண பண்டிகையாக, வெகு விமர்சையாக கொண்டாடி வருவது கேரளா மக்களின் பாரம்பரியம்.

அந்த வகையில் திருவோண பண்டிகையை கேரளா முழவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதே போன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, சென்னை போன்ற மாவட்டங்களிலும்ம்  மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை  வெகு சிறப்பாக கொண்டாடினர்.