Asianet News TamilAsianet News Tamil

அக்டோபர் 16-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு;

On October 16th the Mullai periyar dam was examined ...
On October 16th the Mullai periyar dam was examined ...
Author
First Published Oct 11, 2017, 7:15 AM IST


தேனி

வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நியமித்த மூன்று உறுப்பினர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் 2014-ஆம் அண்டு மே 7-ஆம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பின்னர், அணையைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் மத்திய நீர்வளம் மற்றும் அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தலைமையில் தமிழகம், மற்றும் கேரள அரசுகளின் தரப்பில் தலா ஒரு உறுப்பினர் கொண்ட மூவர் குழு நியமிக்கப்பட்டது. 

பருவ மழைக் காலங்களில் அணையில் மேகொள்ள வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,  பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மை பற்றி ஆய்வு செய்வது போன்றவவை இந்தக் குழுவின் பணி. 

இந்தக் குழுவினர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டனர்.

அத்தோடு கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்து தற்போது இரண்டாவது முறையாக வரும் அக்டோபர் 16-ஆம் தேதி அணையையைப் பார்வையிட இருக்கின்றனர். 

இந்தக் குழுவில் கண்காணிப்பு குழுத் தலைவரான மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணைகள் பாதுகாப்பு அமைப்பு தலைமைப் பொறியாளர் சிவராஜன், தமிழக பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளர் பிரபாகரன், கேரள நீர்வள ஆதார அமைப்பின் செயலர் டிங்குபிஸ்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

அதற்குமுன் அக்டோபர் 11-ஆம் தேதி ஐந்து உறுப்பினர்கள் கொண்ட துணைக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios