Omni buses that charge additional charges are coming within today surveillance circle ...

கோயம்புத்தூர்

தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை இன்று முதல் சாலைப் போக்குவரத்து இணை ஆணையரகம் கண்காணிக்கிறது.

தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்புத்தூர் மண்டல சாலைப் போக்குவரத்து இணை ஆணையர் முருகானந்தம் கூறியது:

“கோயம்புத்தூரில் ஆம்னி பேருந்துகள் உரிமம் பெற்ற வழித் தடத்தில் இயக்கப்படுகின்றனவா? முறையான ஆவணங்களுடன் அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் மட்டுமே இயக்கப்படுகின்றனவா ? என்பது தொடர்பாக அக்டோபர் 13 (அதாவது இன்று) முதல் சோதனை நடத்தப்பட்ட உள்ளது.

இதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் ஏற்கெனவே 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் கணியூர், கோவைப்புதூர், பொள்ளாச்சி, அவிநாசி சாலை, தாராபுரம், பல்லடம், எல் அண்ட் டி புறவழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் 24-ஆம் தேதி வரை சோதனைகளில் ஈடுபடுவர்.

கடந்தாண்டு கூடுதல் கட்டணம் வசூலித்தது, அனுமதியின்றி இயக்கியது தொடர்பாக சுமார் 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பாக 56 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எனவே, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பயண முகவர்கள், நடத்துநர்கள் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம்.

விதிமுறைகளை மீறும் ஆம்னி பேருந்துகள் குறித்து 1800-425-6151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தார்.