மதுரை மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்றினால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் நேற்று முன்தினம் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் மருத்துவர்கள் ஆவர். மும்பை சென்று வந்த நிலையில் அவர்கள் ஒமைக்ரான் தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மற்றவர்கள் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு உருமாறிய ஒமைக்ரான் தொற்றும் ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் வீட்டுத்தனிமையிலும் 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர். ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்படி கொரோனா 3வது அலைக்கு பின், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தற்போது வரை அறிகுறி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதுநிலை மருத்துவ படிப்பு.. சிறப்பு கலந்தாய்வு கிடையாது.. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரிம் கோர்ட்..
