முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டிய அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பல்வேறு பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேர்த்திக்கடன்களும், தீச்சட்டி ஏந்தியும், பால் குடம் ஏந்தியும் செய்தும் கோயில்களில் அதிமுகவினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பச்சையம்மன் கோயிலில் அதிமுகவினர் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். மேலும் கமலாம்பாள் என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தது குறித்து போதிய பாதுகாப்பினை போலீசார் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.