கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய பிரதமர் மோடி அறிவித்தார்.

இதையடுத்து, சில்லறை கிடைக்கமாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பெட்ரோல் பங்குகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே பழைய 500, 1000 ரூபாய் பெறப்படும் என அறிவிக்கப்படிருந்தது.

இதனிடையே, மத்திய அரசின் அறிவிப்பில், மின் வாரியம் வராததால், 500, 1,000 ரூபாய் நோட்டுகள், வாங்கப்படமாட்டாது என்றும்,

தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள், நவ., 9 முதல், 30 வரை என இருப்பின், அந்த இறுதி நாள், ஒரு வாரத்துக்கு சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்படுகிறது. 

அதாவது, அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த கடைசி நாள், நவ., 9 என இருந்தால், அது, 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ., 30 கடைசி நாள் இருந்தால், டிச., 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் குடிநீர் வரி, மின்சார கட்டணத்துக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குடிநீர் வரி, மற்றும் மின்சார கட்டணம் செலுத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நாளை நள்ளிரவு வரை பெறப்படும் என பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது.